பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன பாதணி

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நவீன பாதணி

எந்தவொரு இடமாக இருந்தாலும் சரி, பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் இருவர் சேர்ந்து பெண்களின் பாதுகாப்புக்காக அசாதாரண கண்டுபிடிப்பொன்றை நிகழ்த்தியுள்ளனர்.

அவர்களின் கண்டுபிடிப்பு என்னவென்றால் அதிநவீனத்துடனான பாதணிகள்.

இந்த செருப்பில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், ஆபத்தான சூழலில் பெண்கள் சிக்கிக்கொள்ளும் போது இதிலுள்ள sos பொத்தான்களை அழுத்தும்போது, அது குறித்த பெண்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.

அதுமட்டுமின்றி சம்பவம் நடக்கும் இடத்தின் நேரடியோன ஓடியோ மற்றும் இருப்பிடத்தையும் சேர்த்து அனுப்பும்.

மேலும் பெண்களை தாக்க வருபவர்களுக்கு இந்த செருப்பு மின்சார அதிர்ச்சி கொடுக்கும் திறன் கொண்டது. அரசின் ஆதரவுடன் இந்த செருப்பு விரைவில் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

Share This