அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் – விபரங்களை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிப்பு
இலங்கையில் அதானி குழுமத்தின் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பில் அமைச்சரவையில் விபரங்களை சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த குழு காற்றாலை மின் திட்டங்களை பல துறைகள் மூலம் ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மன்னார் மற்றும் பூநகரியில் முன்மொழியப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் மூலம் மொத்தம் 484 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டங்களில் அதானி குழுமம் ஏற்கனவே சில முதலீடுகளை செய்துள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஆய்வு செய்த பின்னர், இது குறித்து அமைச்சரவை முடிவெடுக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது