பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் – அமைச்சர்  சுசில் ரணசிங்க அறிவிப்பு

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் – அமைச்சர் சுசில் ரணசிங்க அறிவிப்பு

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான மாற்று காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்  சுசில் ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார் .

புதிய வீடுகளை கட்டுவதற்காக பல காணிகள் ஏற்கனவே நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகள் தொடர்பிலான  தகவல்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிராம அலுவலர்கள் மற்றும் வீட்டுவசதி அதிகாரசபையின் தொழில்நுட்ப அதிகாரிகளால் மேலதிக  விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார் .

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு, அவர்களின் வீடுகள் பகுதியளில் சேதமடைந்திருந்தாலும், புதிய வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் .

இதேவேளை,  பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து நிவாரணம் வழங்கும் என்றும் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை உள்ளடக்கிய நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )