கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை வரையிலான கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீட்டராக அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டை சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளிலும் மிதமான கொந்தளிப்பான நிலைமைகள் நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில், மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்கவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )