
ஐ.தே.கவின் அமைப்பாளர் சஜித்துடன் சங்கமம்
மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைப்பாளர் நந்தசேன செல்லஹேவா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
மாத்தறை நகர சபையின் முன்னாள் பிரதி மேயராகவும் இவர் பதவி வகித்தார். இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை தேர்தல் தொகுதி அமைப்பாளர் பிமல் ஜயசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES இலங்கை
