ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க – தென்னாப்பிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தென்னாப்பிரிக்க ஜனாதிபதி  சிரில் ரமபோசாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு  கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி  ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின்  சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டனர்.

Share This