எகிப்தில் ஒன்று கூடும் மத்தியஸ்தர்கள் – கடந்த 24 மணித்தியாலங்களில் 70 பலஸ்தீனியர்கள் பலி

எகிப்தில் ஒன்று கூடும் மத்தியஸ்தர்கள் – கடந்த 24 மணித்தியாலங்களில் 70 பலஸ்தீனியர்கள் பலி

காசா மீதான சுமார் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு
முன்னதாக, எகிப்தில் மத்தியஸ்தர்கள் ஒன்று கூடியுள்ளனர்.

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சில நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்
நெதன்யாகு நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில்,இஸ்ரேலிய இராணுவம் காசா மீது தொடர்ந்து குண்டு தாக்குதல் மேற்கொண்டு
வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 70 பலஸ்தீனியர்கள் இந்த தாக்குதல்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது.

அங்கு இருந்து ஹவுதிகள் காசாவில் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடியாக அடிக்கடி தாக்குதல்களை மேற்கொள்ளவதாக
தெரிவிக்கப்படுகிறது.

Share This