
நெல்லுக்கான அதிகபட்ச விலை – அரசாங்கத்தின் அறிவிப்பு
நெல் கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச விலையை அரசாங்கம் சற்று முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டு அரிசி கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 120 ரூபாய் எனவும், சம்பா கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 125 ரூபாய் எனவும், கீரி சம்பா கிலோ ஒன்றின் அதிகபட்ச விலை 132 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் நெல் கிலோ ஒன்றை வாங்கும் விலையை இன்று (05) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்திருந்தார்.
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் தற்போதைய நெல் கொள்முதல் விலைகள் குறித்து விசனம் தெரிவித்து வந்த பின்னணியிலேயே, அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.
CATEGORIES இலங்கை
