லண்டன் நகரில் நாளைய தினம் அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணி

லண்டன் நகரில் நாளைய தினம் அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணி

லண்டன் நகரில் நாளைய தினம் அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணியொன்று இடம்பெற உள்ளது.

இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

வலதுசாரி அரசியல் வளர்ச்சி மற்றும் குடியேற்ற எதிர்ப்பு மனப்பான்மைக்கு எதிராக இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் முன்னெடுத்து வரும் குடியேற்றக் கொள்கைகள் மிகவும் கடுமையானதாக மாறிவிட்டது. குறிப்பாக, அகதிகள் மற்றும் குடியேற்றம் நாடி வரும் மக்களுக்கான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அணுகுமுறைகள் குறைந்து வருவதாக குற்றச்சாட்டுகளை ஏற்பாட்டாளர்கள்  முன்வைத்துள்ளனர்.

இந்தப் பேரணியில் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு, சமத்துவம், மனித உரிமைகள் மற்றும் திறந்த குடியேற்றக் கொள்கைகளுக்கான ஆதரவை வெளிப்படுத்த உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )