
கோப்பாய் பகுதியில் ஒருவர் வெட்டிக்கொலை
கோப்பாய் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட இருபாலை மடத்தடி பகுதியில் ஒருவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுளடளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறு வாய் தர்க்கமாக மாறியதில் இந்த வாள்வெட்டு இடம்பெற்றதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
CATEGORIES இலங்கை
