குழந்தைப் பேறுக்காக கோழிக் குஞ்சை உயிருடன் விழுங்கிய நபர் உயிரிழப்பு

குழந்தைப் பேறுக்காக கோழிக் குஞ்சை உயிருடன் விழுங்கிய நபர் உயிரிழப்பு

சத்தீஷ்கர் மாநிலம், சுர்குஜா மாவட்டம், சிந்த்காலோ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் யாதவுக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும் குழந்தைகள் இல்லை.

எத்தனையோ மருத்துவ பரிசோதனைகள் செய்தும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை.

இந்நிலையில் குழந்தை வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரிகாரங்கள் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் உள்ளூர் ஜோதிடர் ஒருவரை யாதவ் அணுகியுள்ளார். உயிருடன் கோழிக்குஞ்சு ஒன்றை விழுங்க வேண்டும் என அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.

எப்படியாவது தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக யாதவ்வும் கோழிக்குஞ்சொன்றை விழுங்கியுள்ளார்.

விழுங்கியதும் மயங்கி விழுந்த அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

யாதவ்வை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மூச்சுத் திணறலினால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அவரது உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது தொண்டையில் கோழிக்குஞ்சு ஒன்று சிக்கியிருப்பதை கண்டுபிடித்து அதனை மீட்டுள்ளனர்.

அக் கோழிக்குஞ்சு உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.

இச் சம்பவம் அக் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share This