சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தை மறித்து கொலை மிரட்டல் விடுத்த நபர்

சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்தை மறித்து கொலை மிரட்டல் விடுத்த நபர்

கண்டி பகுதியில் வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிச் சென்ற பேருந்தை மறித்து முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் மிரட்டும் காணொளி வெளியாகியுள்ளது.

நேற்று (10) மாலை நடந்த இந்த கொடூரமான செயலைத் தொடர்ந்து, இன்று காலை சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நாட்டின் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தேசிய செல்வத்தை மிகுந்த முயற்சியுடன் செலவிட திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வாறான மோசமான நடத்தைகள் முழு நாட்டிற்கும் பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேகநபர், தான் ஓட்டிச் சென்ற முச்சக்கர வண்டியை குறுகிய சாலையில் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறி, சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநரை கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றார்.

இதை பேருந்தில் இருந்த மற்றுமொருவர் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This