விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அமைதிக்காக போராடவில்லை – சரத் பொன்சேகா

இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது அனைத்து தரப்பினரும் அமைதிக்காகப் போராடினர் என்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கூற்றுடன் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உடன்படவில்லை என்று கூறுகிறார்.
இந்த மாதம் நடைபெற்ற தேசிய போர்வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில், உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்தபோது பேசிய சரத் பொன்சேகா,
ஜனாதிபதியின் கருத்துடன் உடன்படவில்லை என்றும், மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் நடவடிக்கைகள் அமைதிக்காகச் செய்யப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
“நீங்கள் அமைதிக்காகப் போராடினால், ஸ்ரீ மகா போதி அல்லது தலதா மாளிகையின் புனித தலங்களைத் தாக்க மாட்டீர்கள்” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கில் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிக்கலுவும் அனுமதிப்பதற்கும் தான் உடன்படவில்லை என்றும் சரத் பொன்சேகா மேலும் கூறினார், அண்மையில் வெள்ளவத்தையிலும் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இது போராளிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான வாய்ப்புகளைத் திறக்கும் என்று கூறிய அவர், அதிகாரிகள் விழிப்புடன் இல்லாவிட்டால், நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.