உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

உள்ளூராட்சி தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்புடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (02) மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது, ​​மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களுடன் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கான இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நாளை (3) வரை நீடித்துள்ளது.

 

Share This