நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை, கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அதிக மழைக் காரணமாக மொத்தம் 13 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நீர்த்தேக்கங்களில் மகாகந்தராவ, மகாவிலச்சிய, நுவரவெவ, ராஜாங்கன, உன்னிச்சி, முருத்தவெல, வீரவில, எல்லேவெல, வேமெடில்ல, மெதியாவ, உஸ்கல, எதிமலே மற்றும் வான் எல ஆகியவை அடங்கும்.

இந்த அனைத்து நீர் தேக்கங்களிலும் நீர் கசிவு அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த நீர்த்தேக்கங்களின் கீழ் பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share This