தெரணியாகலையில் மண்சரிவு

தெரணியாகலையில் மண்சரிவு

தெரணியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 112B பண்தாஹாகம கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது.

தெரணியகலவிலிருந்து மாலிபொட தலாவ வரை செல்லும் பிரதான வீதியில் சுமார் 50 மீற்றர் தூரம் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால் வீதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சரிந்து விழுந்த பாறைகள் வீதியில் உள்ளதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவினால் அருகிலுள்ள வீடொன்று சேதமடைந்துள்ள நிலையில், அந்த வீட்டில் இருந்த ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி தெரணியகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This