தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவாக உயர்வு

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 27,000 ரூபாவாக உயர்த்துவதற்கு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 21,000 ரூபாவாக காணப்படுகிறது.
இந்நிலையில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த சம்பள உயர்வு இந்த வருட வரவு செலவுத்திட்டத்திற்கானது மாத்திரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த வருடம் குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 35,000 வரை உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.