கொல்கத்தா கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரிய மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம்
கொல்கத்தாவில் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக் கொலை சம்பவத்துக்கு நீதி கோரி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் இக் கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சியல்டா நீதிமன்றம் தீர்ப்பளித்து.
இந்நிலையில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை போதுமானது அல்ல மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனக்கூறி இவ் வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வுத் துறையினர் மற்றும் மேற்கு வங்காள அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதன்படி இந்த மனுக்கள் கொல்கத்தா மேல் நீதிமன்ற நீதிபதி தேபாங்சு பசாக் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அதன்படி, மத்திய குற்றப் புலனாய்வுத் துறையினர் தரப்பில் முன்னிலைப்பட்ட சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ கூறுகையில், “இவ் வழக்கு தொடர்பில் சியல்டா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தபோது மாநில அரசு அதில் கலந்துகொள்ளவில்லை.
இவ் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை குற்றவாளியென அறிவித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
அதன்பின் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மாநில அரசு செய்யும் மனுவை அனுமதிக்க முடியாது.
மாநில அரசுக்கு இந்த விடயத்தில் எவ்வித அங்கீகாரமும் இல்லை” என்றார்.
இதனை ஏற்ற நீதிபதிகள் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.
ஆனால், மேற்கு வங்காள அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.