கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்

கிளிநொச்சி மேற்கு நீர்ப்பாசன உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று 07.04.2025 ஈடுபட்டனர்.

கிளிநொச்சி மேற்கு பிரிவு நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்றிய உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 03ம் திகதி யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

அவருடைய உயிரிழப்புக்கு குறித்த பிரிவின் பொறியியலாளர்தான் காரணம் என தெரிவித்து சில சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.

குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும், திணைக்களத்தை அவமதிக்கும் செயல் என தெரிவித்து உத்தியோகத்தர்கள் நுழைவாயிலை மூடி கவனயீர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Share This