யாழ் கடற்பரப்பில் 15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கண்டெடுப்பு

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அந்த கடல் பகுதியில் மிதக்கும் சந்தேகத்திற்கிடமான பையொன்று (01) கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட போதே போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
இந்த கேரள கஞ்சா சுமார் 38 கிலோ 700 கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் நடவடிக்கைகளால் போதைப்பொருளை கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தற்காரர்கள் கேரள கஞ்சா கையிருப்பை எலுவை கடலில் கைவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.