கனேமுல்ல சஞ்சீவ கொலை – மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

கனேமுல்ல சஞ்சீவ கொலை – மேலும் இரு சந்தேகநபர்கள் கைது

கனேமுல்ல சஞ்சீவவை கொலை செய்ய உதவியதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் இருவரை மினுவாங்கொடையில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அதன்படி, குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிம் அட்டைகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் உதார நிர்மல் குணரத்ன (28) மற்றும் நளின் துஷ்யந்த (31) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைதுகளின் உட்பட கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் இதுவரையில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ, கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share This