டி20 போட்டிகளில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான கேன் வில்லியம்சன், டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வில்லியம்சன் 93 டி20 போட்டிகளில் விளையாடி, 2500க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் கடைசியாக 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற டி20 உலகக் கிண்ண தொடரில் விளையாடி இருந்தார்.
2011ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான கேன் வில்லியம்சன் 75 போட்டிகளில் அணியை வழிநடத்தியுள்ளார்.
இதில் இரண்டு முறை டி20 உலகக் கிண்ண தொடர்களில் அரையிறுதிக் போட்டிக்கு அழைத்துச் சென்ற அவர் ஒரு முறை இறுதிப் போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றிருந்தார்.
2021 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் அடித்த 85 ஓட்டங்கள், ஆடவர் டி20 உலகக் கிண்ண எந்தப் பதிப்பிலும் அணித் தலைவர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டமாகும்.
