கடுகன்னாவ பஸ் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்

கடுகன்னாவ பஸ் விபத்து – ஐவர் வைத்தியசாலையில்

கொழும்பு – கண்டி வீதியின் கடுகண்ணாவ டாசன் டவர் பகுதியில் பஸ் ஒன்று மரமொன்றில் மோதி  விபத்துக்குள்ளானாதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான தெல்தெனிய டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share This