யாழில் இடம்பெற்ற கூட்டு மே தின பேரணி

யாழில் இடம்பெற்ற கூட்டு மே தின பேரணி

தொழிற்சங்கங்கள், வெகுஜன மற்றும் சிவில் அமைப்புகளுடன் இலங்கை ஆசிரியர் சங்கம் இணைந்து நடாத்திய கூட்டு மே தினம் பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இன்று முற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான குறித்த பேரணி நகர் பகுதி ஊடாக பயணித்து யாழ்.பொது நூலகம் முன்பாக நிறைவுபெற்றது.

பேரணியில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரி! அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள முரண்பாட்டை உடணடியாக நீக்கு!

மலையகத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு! கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கு!

விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கு! உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This