
இந்த வருடத்தின் முதல் சதத்தை பதிவு செய்தார் ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இந்த வருடத்தின் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் அவர் சதமடித்துள்ளார்.
இதன் மூலம் தனது 41 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜோ ரூட்டின் இந்த சதம் அவுஸ்திரேலியாவில் அவரது இரண்டாவது சதமாகும் என்பதுடன், இந்தத் தொடரில் அவர் பெற்றுக்கொண்ட இரண்டாவது சதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இன்னிங்ஸில் அவர் பெற்றுக்கொண்ட ஓட்டங்களுடன் தற்போது 13,937 டெஸ்ட் ஓட்டங்களை குவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்துள்ள சச்சின் டெண்டுல்கருடன் 1984 ஓட்டங்களால் ஜோ ரூட் பின் தங்கியுள்ளார்.
தற்போது 35 வயதான ரூட் 163 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். விரைவில் சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 384 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில் ஆட்டமிழந்திருந்தது
ஜோ ரூட் 160 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். அவரை தவிர ஹாரி புரூக் 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
அவுஸ்திரேலியா அணியின் மைக்கேல் நெசர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
தற்போது அவுஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
