
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தற்போது மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
குறித்த கூட்டத்தில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் அதிகரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டபலர் கலந்து கொண்டுள்ளனர்.
CATEGORIES இலங்கை
