இஸ்ரோவின் 100 ஆவது செயற்கைக்கோள்…நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயார்

இஸ்ரோவின் 100 ஆவது செயற்கைக்கோள்…நாளை மறுதினம் விண்ணில் செலுத்த தயார்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நாளை மறுதினம் (29ஆம் திகதி) அதன் 100 ஆவது செயற்கைக்கோளை விண்ணில் ஏவ உள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. எப் – 15 எனும் ரொக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற வழிசெலுத்தும் இந்த செயற்கைக் கோள் புவி ஒத்திசைவான பரிமாற்ற சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்படவுள்ளது.

இந்த ரொக்கெட்டுக்கான 25 மணித்தியால கவுண்டன்ட் பணிகள் நாளை செவ்வாய்க்கிழமை காலை 5.23இலிருந்து ஆரம்பமாகும்.

அத்துடன் ரொக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, ரொக்கெட் விண்ணில் ஏவ தயாராக இருப்பதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )