காசாவில் இஸ்ரேலிய மீண்டும் தாக்குதல் – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேலிய மீண்டும் தாக்குதல் – 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

ஹமாஸுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், காசா பகுதியில் “விரிவான தாக்குதல்களை” நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் தற்போது “காசா பகுதியில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாத இலக்குகள் மீது விரிவான தாக்குதல்களை நடத்தி வருவதாக” தெரிவித்துள்ளது.

மேலும், தாக்குதல் குறித்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் இஸ்ரேலிய இராணுவம் டெலிகிராம் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளது.

காசாவில் ‘இராணுவ பலத்தை அதிகரிப்பதாக’ இஸ்ரேல் உறுதியளித்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை, காசா முழுவதும் ஹமாஸைத் தாக்க இராணுவத்திற்கு அறிவுறுத்தியதாக இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் தனது பணயக்கைதிகளை விடுவிக்க மீண்டும் மீண்டும் மறுத்ததாலும், அமெரிக்க ஜனாதிபதி தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மத்தியஸ்தர்களிடமிருந்து பெற்ற அனைத்து சலுகைகளையும் நிராகரித்ததாலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சுமார் இரண்டு மாதங்களாக நடந்த போர் நிறுத்தத்திற்குப் பிறகு இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன

செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Share This