இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்தார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான சந்தேக நபரானஇஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதேவேளை, கெஹல்பத்தர பத்மே, அவரது மனைவி மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோர் மலேசியாவில் இருந்து தாய்லாந்திற்கு படகு மூலம் தப்பிச் செல்லும்போது கடந்த ஒன்பதாம் திகதி மலேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இலங்கை காவல்துறையும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியது, பின்னர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வர இரண்டு குழுக்களை அனுப்பியிருந்தது.
எவ்வாறாயினும், கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரும் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு நாளை நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.