இலங்கையின் முதல் நிலை செல்வந்தரானார் இஷாரா நாணயக்கார – கல்ஃப் நியூஸ் தகவல்

இஷாரா நாணயக்கார இலங்கையின் மிகப் பெரிய செல்வந்தர் என்று கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி அவரது நிகர மதிப்பு 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானியை 118 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர மதிப்புடன் பிராந்தியத்தின் மிகப் பெரிய செல்வந்தராக குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் ஏனைய தெற்காசிய நாடுகளில் உள்ள முதல் நிலை செல்வந்தவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பாகிஸ்தானின் ஷாஹித் கான் (13.5 பில்லியன் அமெரிக்க டொலர்), பங்களாதேஷின் மோசா பின் ஷம்ஷர் (12 பில்லியன் அமெரிக்க டொலர்கள்), நேபாளத்தின் பினோத் சவுத்ரி (1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) மற்றும் இலங்கையின் இஷாரா நாணயக்கார (1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) சொத்து மதிப்புடன் அந்தந்த நாடுகளின் முதல் நிலை செல்வந்தர்களாக உள்ளனர்.
கல்ஃப் நியூஸின் கூற்றுப்படி, அம்பானியின் சொத்து மதிப்பு மற்ற தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த செல்வந்தர்களின் சொத்து மதிப்பை விடக் மிக அதிகமாகும்.
அம்பானியின் சொத்து மதிப்பு பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ஷாஹித் கானின் சொத்து மதிப்பை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இஷார நாணயக்கார — 1.6 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, தம்மிக்க பெரேராவை முந்தி இலங்கையின் பணக்காரராக இஷார நாணயக்கார உருவெடுத்துள்ளார். சுமார் 1.6 பில்லியன் நிகர மதிப்புடன் அவர் இலங்கையின் முதல்நிலை செல்வந்தராக மாறியுள்ளனர்.
10க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பாடுகளைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதி சேவைகள் மற்றும் முதலீட்டு கூட்டு நிறுவனமான LOLC ஹோல்டிங்ஸை அவர் வழிநடத்துகிறார்.
உலகளாவிய நுண்நிதி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் இலங்கையின் இருப்பை விரிவுபடுத்துவதில் நாணயக்கார முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.