சீனாவின் பிரம்மாண்டமான தூதரகத்தால் இங்கிலாந்துக்கு ஆபத்தா?

சீனாவின் பிரம்மாண்டமான தூதரகத்தால் இங்கிலாந்துக்கு ஆபத்தா?

லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராயல் மின்ட் கோர்ட் (Royal Mint Court) பகுதியில் சீனா தனது பிரம்மாண்டமான தூதரகத்தைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

ஆனால், இந்தத் திட்டத்தை நிராகரிக்குமாறு தொழிற்கட்சி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 09 பேர், இங்கிலாந்து அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

இங்கிலாந்துப் பிரதமர் சீனாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக தூதரகத்தை அங்கீகரிப்பதற்கான அறிவிப்பு வரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகிய நிலையிலேயே மேற்படி எதிர்ப்பு வெளிவந்துள்ளது.

குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அச்சங்களைக் காரணம் காட்டி, இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தை நிறுத்துமாறு தொழிற்கட்சி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கோரப்பட்டுள்ளது.

இந்தத் தூதரகம் அமையவிருக்கும் இடம், லண்டனின் முக்கிய பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்புத் தொடர்பான உள்கட்டமைப்புகளுக்கு மிக அருகில் உள்ளதாகவும் குறித்த எம்.பிகள் எச்சரித்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )