ஈரான் போர் – அமெரிக்கா இதுவரை எத்தனை இராணுவ விமானங்களை இழந்துள்ளது?

ஈரான் போர் – அமெரிக்கா இதுவரை எத்தனை இராணுவ விமானங்களை இழந்துள்ளது?

மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் போது, ​​மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் KC-135 விபத்துக்குள்ளான சம்பவம் தற்போது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் மத்திய கிழக்கு கட்டளைப் பிரிவான சென்ட்காம், இந்த சம்பவம் எதிரி அல்லது நட்பு நாடுகளின் துப்பாக்கிச் சூட்டால் ஏற்படவில்லை என்று அறிவித்துள்ளது.

எனினும், அமெரிக்க இராணுவ விமானத்தை ஈராக்கிய எதிர்ப்புக் குழுக்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், குறித்த விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாகக் கூறியதாகவும் ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த போரில் அமெரிக்கா இழந்துள்ள நான்காவது இராணுவ விமானம் இதுவாகும். ஈரான் மீதான போர் கடந்த 28ஆம் திகதி ஆரம்பமானது.

ஆரம்ப நாட்களில், ஈரானிய விமானங்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது, ​​குவைத் படைகள் தவறுதலாக மூன்று அமெரிக்க F-15E விமானங்களை சுட்டு வீழ்த்தின.

எனினும், அந்த விமானங்களில் இருந்த ஆறு பணியாளர்களும் சரியான நேரத்தில் பாதுகாப்பாக தரையிங்கினர்.

அமெரிக்க விமானப்படையின் கூற்றுப்படி, KC-135 விமானம் வானில் மற்ற விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப் பயன்படுகிறது.
பொதுவாக இந்த விமானத்தில் ஒரு விமானி, துணை விமானி மற்றும் எரிபொருள் விநியோக அமைப்பு இயக்குநர் உட்பட மூன்று பேர் கொண்ட குழு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பயணங்களில், இந்த விமானம் ஒரு நேவிகேட்டரையும் கொண்டிருக்கும் எனவும், அதே நேரத்தில் இது 37 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )