
அமெரிக்காவுடன் இணையும் எண்ணெய் நிறுவனங்கள் சாம்பலாக மாறும் – ஈரான் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணைக்கு வடமேற்குப் பகுதியில் கார்க் தீவில் அமைந்துள்ள ஈரானிய இராணுவ உட்கட்டமைப்பை அமெரிக்கப் படைகள் முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Truth Social பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதிலடியாக ஈரான் தற்போது இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே மத்திய கிழக்கிற்கு மேலும் அமெரிக்க கடற்படை வீரர்கள் மற்றும் போர்க்கப்பல்கள் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜப்பானை தளமாகக் கொண்ட USS Tripoli (LHA-7) கப்பலை தலைமையாகக் கொண்டு, அமெரிக்க கடற்படையிலிருந்து கூடுதல் படைகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
