இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவரை தூக்கிலிட்டது ஈரான்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவரை தூக்கிலிட்டது ஈரான்

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் அசர்பைஜான் மாகாணம் உர்மியா சிறைச்சாலையில் அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி மற்றும் ரசுல் அகமது ரசுல் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு உதவியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடனான மோதலின் போது கடந்த 10 நாட்களில் உளவு பார்த்ததாக ஏற்கனவே மூவருக்கு ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியிருந்தது.

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 700 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This