
ஐபில் மினி ஏலம் – 18 கோடிக்கு வாங்கப்பட்ட மதீஷ பத்திரன
2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று இடம்பெற்ற நிலையில், இலங்கை அணியின் மதீஷ பத்திரன 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்திருந்தது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்று மதியம் அபுதாபியில் ஆரம்பமாகியிருந்தது.
ஆரம்பம் முதலே வீரர்களை வாங்குவதில் அணிகள் தீவிரம் காட்டியிருந்தன.
இதில் அவுஸ்திரேலியா அணியின் கெமரூன் கிரீன் 25.2 கோடி இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டிருந்தார்.
எனினும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
வெங்கடேஷ் ஐயர் ஏழு கோடி ரூபாவிற்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டிருந்தார்.
இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க அடிப்படை விலையான இரண்டு கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டிருந்தார்.
இந்த ஏலத்தின் போது சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட மதீஷ பத்திரனவை வாங்குவதில் லன்னோ, டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் தீவிரடாக போட்டியிட்டன.
இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 கோடி ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
