ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய விசாரணைளை குற்றப்புலனாய்வு திணைக்களம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு மேலதிகமாக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி ரத்மலானையில் சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தமது காரில், அலுவலகம் நோக்கி பயணித்த போது
கொலை செய்யப்பட்டார்.

இதேவேளை, ஊடகவிலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

Share This