தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம்

தேசபந்துவின் பதவிக்கால முறைகேடுகள் தொடர்பில் இன்று முதல் விசாரணைகள் ஆரம்பம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பதவிக்கால முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று முதல் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கமைய பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் முதல் தடவையாக இன்றைய தினம் குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.

விசாரணைக் குழு இன்று பிற்பகல் 02 மணிக்கு நாடாளுமன்ற குழு அறை 8 இல் கூடவுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This