கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பு மெகசின் சிறைச்சாலை கைதியின் மரணம் தொடர்பாக பொரளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மஹரகம பொலிஸாரால் கைதான சந்தேகநபர் கடந்த மாதம் 23 ஆம் திகதி விளக்கமறியலில்
வைக்கப்பட்டார்.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் இரு அதிகாரிகள், போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் அந்த நபரை பரிசோதிக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளை விழுங்கியதாகவும், அதன் பின்னர் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் இரண்டு கைதிகளும் அவர் மீது
தாக்குதல் மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலத்த காயமடைந்த கைதி, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தார்.

ஒரு பிள்ளையின் தந்தையான இவருக்கு 54 வயதாகும்.

சிறை அதிகாரிகள் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கத் தவறிவிட்டதாக உயிரிழந்த கைதியின் மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

Share This