கொழும்பில் சர்வதேச புத்தக கண்காட்சி

சர்வதேச புத்தக கண்காட்சி கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று காலை 09 மணிக்கு கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு 500க்கும் அதிகமான காட்சிக் கூடங்கள் உள்ளன.
எதிர்வரும் ஆறாம் திகதி வரை கண்காட்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.