ராஜகுமாரி மரணம் தொடர்பான விசாரணை – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ராஜகுமாரி மரணம் தொடர்பான விசாரணை – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவருக்கு எதிரான முழுமையான வழக்கு விசாரணை ஜூலை 21ஆம் திகதி நடத்த கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெலிக்கடை பொலிஸாரால் கடந்த 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட வீட்டுப் பணிப்பெண் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சபுவிடா முன் இன்று வியாழக்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். குறித்த வழக்கு விசாரணையின் போது, வழக்கு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று பிரதிவாதி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

இந்நிலையில், தேவையான ஆவணங்கள் பிரதிவாதிக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அரசு சட்டத்தரணிக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்..

பதுளையைச் சேர்ந்த 41 வயதான பாதிக்கப்பட்ட ஆர்.ராஜகுமாரி, தங்க நகைகள் திருடப்பட்டதாகக் கூறி, அவரது முதலாளியான பிரபல தயாரிப்பாளர் சுதர்மா நெதிகுமார அளித்த புகாரைத் தொடர்ந்து, 2023 மே 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது ராஜகுமாரி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This