ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கிண்ண தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைவராக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அணியின் துணை தலைவராக ஷூப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.

17வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. செப்டம்பர் ஒன்பதாம் திகதி 28ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதில் குழு ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளும், குழு பி பிரிவில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இந்த தொடரின் முதல் போட்டியில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி செப்டம்பர் 10ஆம் திகதி முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது.

மேலும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் சபைகள் அறித்துள்ளது. தற்போது அந்திய அணி 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

இதில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்டியா, அபிஷேக் சர்மா, திலக் வர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரெல், ரமந்தீப் சிங், ரவி பிஷ்னோய் உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Share This