கனடாவில் இந்திய மாணவன் படுகொலை

கனடாவில் இந்திய மாணவன் படுகொலை

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கனடாவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கனடாவில் உள்ள லாம்ப்டன் கல்லூரியில் வணிக மேலாண்மை துறையில் முதல் ஆண்டில் கற்று வந்துள்ளார்.

சர்னியா பகுதியில் 36 வயதுடைய நபரொருவருடன் அறையொன்றில் தங்கி வந்துள்ளார்.இருவரிடையே ஏற்பட்ட கருத்து மோதலைத்
தொடர்ந்து குறித்த மாணவன் மீது மற்றைய நபர் கத்திக் குத்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதன் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, தகவல் அறிந்தபொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் அந்த நபரையும் கைது செய்தனர்.

கனடாவில் இந்திய மாணவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This