
திருகோணமலை கடற்கரையில் ஒதுங்கிய இந்திய ரொக்கெட் பாகங்கள்!
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் (28) இந்திய நாட்டுக்கு சொந்தமானதாக கருதப்படும் ரொக்கட்டின் பாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ரொக்கட்டின் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் சம்பூர் – மலைமுந்தல் கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் இரு கடற்படை வீரர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ரொக்கெட் பாகம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த பாகமானது விண்வெளிக்கு அனுப்பப்படும் ரொக்கட்டின் பாகங்களாக இருக்கலாமா எனவும் ரொக்கட் மேலெழுந்து செல்கின்றபோது கழன்று விழுகின்ற பாகங்களாக இவை இருக்கலாமா என்று சந்தேகம் வெளியிடப்படுகின்றன.
