இந்தியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அனுமதி

இந்தியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு அனுமதி

இந்தியா மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிரித்தானியா மற்றும் மாலத்தீவுக்கான உத்தியோகப்பூர்வ நான்கு நாள் விஜயம் இன்று புதன்கிழமை ஆரம்பமாகிறது

இந்நிலையில் இந்த முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் லண்டனில் நாளை கையெழுத்தாகவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாட்டு பொருளாதாரங்களுக்கிடையேயான வர்த்தகத்தை 120 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இரட்டிப்பாக்கும் முயற்சியில், காலணிகள் மற்றும் ஆடைகள் போன்ற உழைப்பு அதிகமான பொருட்களின் ஏற்றுமதி மீதான வரிகளை நீக்கவும், பிரித்தானியாவிலிருந்து இருந்து மதுபானம் மற்றும் கார் இறக்குமதியை மலிவாக மாற்றுவதையும் இந்த வர்த்தக ஒப்பந்தம் முன்மொழிகிறது.

இந்த ஒப்பந்தத்தில் பொருட்கள், சேவைகள், புதுமை, அரசாங்க கொள்முதல் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்த விடயங்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This