மனித உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா உறுதி

மனித உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா உறுதி

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் இந்தியா தயாராக உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 58வது அமர்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலகில் பயங்கரவாதத்தை இயல்பாக்கும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக தனது நாடு துணை நிற்கத் தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் இன்று (26) தெரிவித்தார்.

புவிசார் அரசியல் நெருக்கடிகளைப் பற்றிப் பேசிய அவர், வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதில் உலக விவகாரங்களில் எழுந்துள்ள உறுதியற்ற தன்மையையும் ஜெய்சங்கர் எடுத்துரைத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share This