சுதந்திர தின விழா : பாதுகாப்பு கடமையில் 1,650 பொலிஸார்

இலங்கையின் 77ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான பிரதான விழா மற்றும் ஒத்திகைகளின் போது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 1,650 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இடையூறு ஏற்படாத வகையில் ஒத்திகை மற்றும் நிகழ்வை எளிதாக்கும் வகையில் பொலிஸ் சிறப்பு போக்குவரத்து திட்டத்தையும் அறிவித்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகைக்கான தயாரிப்பாக, இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சிறப்பு போக்குவரத்து திட்டம் செயற்படுத்தப்பட்டது.