ஹபரணையில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு ; 25 பேருக்கு காயம்

ஹபரணை பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
திருகோணமலை-ஹபரணை வீதியில் இன்று (01) பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்வாறு இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட இருவரில் வேனின் சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.