இவற்றை உணவில் சேர்த்துக்கோங்க…நூறு வருஷம் ஹேப்பியா இருக்கலாம்

நாம் உண்ணும் உணவுதான் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கம் செலுத்துகின்றது. அந்த வகையில் கலோரிகள் அதிகமான ஒரு சில உணவுகளை உண்பதைக் காட்டிலும் ஆரோக்கியமான சில உணவுகளை எடுத்துக்கொள்வது நமது உடலுக்கு நன்மை பயக்கும்.
அவற்றைப் பற்றி பார்ப்போம்.
நட் பட்டர் – முந்திரி, பாதாம், வேர்க்கடலை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் இந்த நட் பட்டர் க்ரீமி சுவை கொண்டது. இது புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புச் சத்தைக் கொண்டது. எனவே இதயத்தின் ஆரோக்கியத்தை காக்கும்.
ஒலிவ் எண்ணெய் – இதிலுள்ள கொழுப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
அவகேடோ – இதில் அடங்கியுள்ள நார்ச் சத்துக்கள், விட்டமின்கள், பொட்டாசியம் போன்றன கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன.
தேங்காய் எண்ணெய் – சமையல் மற்றும் பேக்கிங் போன்றவற்றுக்கு தேங்காய் எண்ணெய் சேர்ப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
ஸ்ப்ரெட் – அவகேடோ எண்ணெய், சோயா பீன் எண்ணெய் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் இந்த ஸ்ப்ரெட் இதய ஆரோக்கியத்துக்கு சிறந்தது.