இந்த விலங்கினத்தில் ஆண் தான் கருவுறுமாம்

மனிதர்களாக இருந்தாலும் சரி விலங்குகளாக இருந்தாலும் சரி பெண் இனம் தான் கருவுற்று குட்டியீனும் இல்லையா. ஆனால், ஒரு விலங்கினத்தில் மட்டும் ஆண் இனம் கர்ப்பத்தை சுமக்கிறது.
அதாவது, Syngnathidae குடும்பத்தைச் சேர்ந்த மீன்களின் குழுவில் ஆண் மீன்களே சந்ததியை சுமக்கின்றன.
குறிப்பாக கடல் குதிரைகள். இவற்றின் உடலமைப்பின் காரணமாக குழந்தைப் பேறு மற்றும் வளர்க்கும் பொறுப்பு பெண்களிடமிருந்து ஆண்களுக்கு மாற்றப்படுகிறது.
முதலில் பெண் விலங்கு முட்டைகளை ஆண் விலங்கின் வயிற்றுக்கு மாற்றுகிறது. இதற்காக ஆண் கடல் குதிரையின் வயிற்றில் சிறப்பு பைகளும் காணப்படுகின்றன. அங்கு அவை முட்டையிடுகின்றன.
எனவே முட்டைகள் ஆணின் உடலில் கருவுறுகின்றன. இவை குஞ்சு பொரித்து பிறப்பதற்கு இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை ஆகிறது.
ஒரு கடல் குதிரை ஒரு நேரத்தில் 50 முதல் 1000 குட்டிகளை ஈனுகிறது.
ஆனால், ஒரு கடல் குதிரை குஞ்சு மட்டுமே முதிர்ச்சியடைகிறது.