சர்வதேச நாணயநிதிய நிறைவேற்று சபை அடுத்த வாரம் கூடுகிறது

சர்வதேச நாணயநிதிய நிறைவேற்று சபை  அடுத்த வாரம் கூடுகிறது

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான மூன்றாவது மீளாய்வு தொடர்பில் பரிசீலிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளது.

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பணியாளர்கள் மட்ட இணக்கப்பாட்டை எட்டியது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை மூன்றாவது மீளாய்வைப் பரிசீலித்து அங்கீகரிக்குமாயின் இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நான்காவது தவணையாக மேலும் 333 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This